Skip to main content

Posts

Showing posts from October, 2015

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானித்துவிட்டு  தான் தொழில் துவங்க வருகிறார்கள்

‪பொறியியலுக்கு‬ ‪ பின்‬

பொறியியலுக்கு பின் ஒவ்வொரு பொறியாளனும் சொல்ல முடியா மனக்குமுறல்களை மனதிற்குள் புதைத்துவிட்டு , வெள்ளேந்தியான சிரிப்பை மட்டும் வெளிச்சமாய் காட்டுகிறான். தான் எதற்கு தகுதியானவன் என்பதை தரம் காண்பதற்கு மட்டுமே அந்த நான்கு வருட பொறியியல் பயணம் அவனை தாரைவார்த்து கொள்கிறது. அரசு கல்லூரியில் படித்தவனுக்கும் , அயல் நாட்டு தோரனையில் படித்தவனுக்கும் இது பொருந்தாத கூற்றுதான் . ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை கல்லூரி முடியும் முன்னே கனகச்சிதமாக கணிக்கபட்டுவிடும். பாவம் இதில் பரிதாபத்திற்க்கு உள்ளாபவர்கள் இரண்டாம் நிலை கல்லூரியில் படித்த இயலா வர்க்கம் தான். இயலா வர்க்கத்தின் வாரிசுகள்தான் இயன்றதை செய்து கொண்டு இன்றளவும் சென்னையை வலம் வருகின்றார்கள் . நிச்சயம் இனியும் வலம் வருவார்கள். இந்த இயலா வர்க்கத்தின் இயந்திரவியல் பொறியாளனோ மூன்று வேளை உணவிற்க்கு தினக்கூலியாய் அந்த அயல்நாட்டு தோரனைக்கு அடி பணிந்து அடிமையாய் உழைக்கிறான். கணிணிஅறிவியல் படித்தவனோ training என்ற பெயரில் கால்காசு வாங்காமல் கலூன்ற வழியின்றி அதையே நினைத்து தவிக்கிறான். இரு பிரிவினருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை தன்