Skip to main content

Posts

Showing posts from July, 2016

சாமானியனின்‬ ‪‎கேள்விகள்‬

நட்சத்திர காக்கிகளை கண்டாலே இப்பொழுதெல்லாம் கண்கள் தானாக வியர்கிறது. ஏன் என்ற கேள்விக்கு சொல்ல முடிந்த காரணங்கள் ஆயிரங்கள் இருப்பினும் , சொல்லாமல் நகர்வது தான் என் உடம்பிற்க்கு சிறந்தது. கரைவேட்டிகளுக்கு காவல் கொடுக்கும் உங்களை இகழ்ந்தவர்களை விட , அனுதாபத்தில் அயர்ந்தவர்கள் தான் இங்கு அதிகம். ஆனாலும் காரணங்களின்றி உங்கள் கைகள் , கண்டதும் சிலரை அடித்திடும். அதையும் என் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியாய் வேடிக்கை பார்த்திடும். அந்த சிலரும் ஏழ்மையின் பிடியில் வாடித்துடித்திடும் தரைநிலை வர்க்கங்கள். யாரேனும் கேட்டாலோ , அவனுக்கும் அதே நிலைதான். மேல்நிலை வர்க்கத்தை கண்டாலே பம்பி பதுங்கும் உங்கள் விழிகள் , தரைநிலை வர்க்கம் என்றவுடன் தாவிகுதித்து அவர்களை பந்தாடுவது ஏன்? காவல் துறை உங்கள் நண்பன் என்ற உங்கள் வாசகத்தை மறுமுறையேனும் பரிசீலித்து கொள்ளுங்கள். நடப்பவை யாவும் நண்பன் என்ற சொல்லை தகர்த்து சொல்லமுடியா சொற்களை மண்டைக்குள் ஏற்றுகிறது. அடக்குமுறை என்ற பெயரில் பணமில்லா மனிதத்தை அடித்து அடிமை படுத்துவதற்க்கு எதற்கு சுதந்திரம் ? ஆங்கிலேயன் பிடியிலேயே அடிமையாய் இருந்திருப

‪‎மனிதம்‬

மனிதம் மறைந்ததா ? இல்லை மடிந்ததா ? மறைந்தது என்றால் மறைத்தது யார்? மடிந்தது என்றால் அழித்தது யார்? தன் நலத்தை தேடும் அவனின் ஆறறிவு அழித்ததோ ? இல்லை , தற்பெருமை பேசும் அவனின் நாவறிவு மறைத்ததோ ? உடலில்லா மனதிற்க்கு வஞ்சபுகழ்ச்சி ஏராளம் அறுபட்ட உடலிற்க்கு வஞ்சக இகழ்ச்சி தாராளம் பிஞ்சென்று பாராமல் பிஞ்சிலே தோலுரிப்பான் பின்னூட்ட நிகழ்வையெல்லாம் ஒளித்திரையில் ஏற்றி வைப்பான் மனிதம் மறைந்ததா? இல்லை மடிந்ததா? அடிப்பட்டு கிடந்தாலோ அமைதியாய் நகர்ந்திடுவான் அதைவைத்து கதைபேசி ஒரு வாரம் கடந்திடுவான் பணமான கல்விக்குள் மனிதத்தை மறைத்திடுவான் கல்வியின் பணத்திற்க்கு மனிதத்தை அழித்திடுவான் மனிதம் மறைந்ததா? இல்லை மடிந்ததா? அடுப்பூதும் பெண்களையும் அரியணையில் ஏற வைப்பான் அதில் உள்ள சூழ்ச்சிகளை அவன் மட்டும் அறிந்திருப்பான் உதவியென்று கேட்டாலோ உமிழ்ந்தபடி சிரித்திடுவான் ஊர்உலகம் எல்லாவும் அவன் செய்ததாய் பறை அடித்திடுவான் மனிதம் மறைந்ததா? இல்லை மடிந்ததா? சாதியென்று சாமியென்று சங்கத்தை பிரித்திடுவான் காதலிக்கும் ஜோடிகளை கழுத்தறுத்து கண் வியர்த்திடுவான் ஏழையென்று அறிந்தாலோ

கல்லரை கனவுகள்

கனவுகளை தேடி தேடி கரை படிந்த படிகமானேன் கனவிற்கு ஓர் உயிர் இருந்திருந்தால் கதறி துடித்திருக்கும் கருணையும் அழுதிருக்கும் உயிரில்லா ஜடத்திற்க்கு உயிரூட்ட ஓர் உணர்வு உணர்வில்லா உடம்பிற்கு உயிரென்று ஓர் கனவு தேடி தேடி துவண்ட மனம் தேம்பி தேம்பி அழுகிறது அரவணைக்க ஏங்கவில்லை ஆறுதல் சொல்ல ஏங்குகிறது கனவுகளை முந்திகொண்டு காலங்கள் கரைகிறது நினைவுகளை அழித்த படி நேரங்கள் நகர்கிறது கண்மூடும் வாழ்கையில் தான் கனவுகளை புதைத்த படி கண்ணயர்ந்து புலம்புகிறேன் கல்லரை பெட்டிக்குள்ளே

‪கேப்டனிடம்‬ ‪சாமானியனின்‬ ‪கேள்விகள்‬

கேப்டன் என்ற இந்த பெயரில் தான் விழுந்தது என் சமகால இளைஞர் தலைமுறை. இன்றுவரை உங்கள் படங்களினால் ஈர்க்கப்பட்ட பலகோடி ரசிகர்களில் நானும் ஒருவன். 2005 இல் நீங்கள் முழுநேர அரசியலில் முழுமையாய் இறங்கிய போது தமிழ்நாடு மாறிவிடும் என்ற மகிழ்ச்சியில் திளைத்துப்போனேன். அந்நாளில் தமிழக மக்களின் பெருவாரியான எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்தது. 2006இல் நடந்த தேர்தல் தான் உங்கள் கட்சிக்கான முதல் அங்கீகாரம். அடையாளம் என்றும் கூட சொல்லலாம். ஆளுமையில் உள்ள கட்சிகளே கூட்டணியை தேடி அழைந்த போது ,234 தொகுதியிலும் தனித்து நிற்பதாய் மக்கள் அனைவரையும் திகைக்க வைத்தீர்கள். உங்களின் துணிச்சலான அந்த முடிவிற்க்கு பலனும் கிடைத்தது. கட்சி தொடங்கிய எட்டே மாதங்களில் பொது தேர்தலை தனித்து சந்தித்து 30 இலட்சம் வாக்காளர்களை கொத்தாக அள்ளினீர்கள். அந்த 30 இலட்சத்தில் இளைஞர் கூட்டம் மிக அதிகம். அரசாண்ட கட்சிகள் அனைத்தும் வாயடைத்து போனது. அரசியல் விமர்சகர்களையே அதிர வைத்த தேர்தலாக அது அமைந்தது. இடைப்பட்ட காலங்களில் (2006-2009) உங்களின் செய்கை சரியான பாதையில் கச்சிதமாய் சென்று கொண்டிருந்தது. அதுவரை இணைய உ

‪நெடுநாள் தவம்‬

காற்றடைத்த குமிழிக்குள் கயவன் போல் என் உருவம்... கை , கால்கள் அசைகிறது சண்டையிட துடிக்கிறது... கழுத்தின் ஓரம் சுற்றப்பட்ட கயிற்றின் ஈரம் என்னை பதபதைக்க வைக்கிறது... பயத்தில் உறைந்தவனாய் அசையாமல் படுத்திருந்தேன்.. எங்கோ ஓர் கதறல் என் காதுகளை செவிடாக்கியது.. அந்த அலறல் மிகுந்த கதறலில் என் உடல் தானாக ஆடியது... கத்தி முனையில் என் உயிர்... கழுத்தை நெருங்கிய கத்தியின் கூர்மை கழுத்தை தவிர்த்து அக்கயிற்றை அறுத்தது... நினைவிழந்த என் உடலில் ஏதோ ஓர் உணர்வு.. நீருக்குள் இருந்த நெடுநாள் தவமும் அன்றோடு கலைந்தது.. சிசுவாய் இருந்த எந்தன் மனமும் உயிர்ப்பெற்றெழுந்தது...

‪முகமில்லா‬ ‪அலைகள்‬

நீலமேக வானமெங்கும் நெருப்பாய் ஓர் வெளிச்சம் நித்திரை நிலவொளியும் நிழல் மூடி மறைந்தது உப்பு காற்று முகம் தடவ மணல் துகள்கள் கட்டி அணைக்க அலைகளுக்குள்ளே ஓர் அழுத்தம் அவள் கால்களை அழுத்தி பிடிக்க ஆதவனும் எட்டிப்பார்த்தது அக்கன்னியின் அழகிய முகத்தை அலைகளின் முத்த சிதறல்கள் அவளின் முகத்தை நனைத்தபடி வழிந்தது தூரத்தில் தெரிந்த பாய்மர படகும் அவளை நோக்கியே நகர்ந்தது ஏதும் அறியாதவளாய் அவள் கண்களுக்குள் ஓர் கடல்நீர்.. எதையோ துலைத்தவள் தான் பாவம் விழிநீரில் விம்மியபடி தேடுகிறாள்... அவளிடம் ஆறுதல் சொல்ல வாய்பேசா அவ்வலைகளும் ஆர்வத்தில் ஆர்ப்பரித்தது நிமிடங்கள் நகர கட்டி அணைத்த மணல் துகள்களை உதறியபடி கடலுக்குள் காதல் செய்ய கன்னியவள் மூழ்கிவிட்டாள் அவளை உடல்கோர்த்து உருட்டி சென்று உணர்விற்க்கு உயிரளித்து உடலைமட்டும் கக்கியபடி உள்ளுக்குள்ளே மறைந்தது முகமில்லா அவ்வலைகளும்..

யார் அவள்

யார் அவள்! இதுவரை கண்டதில்லை இன்று தான் முதல்முறை.. நிமிடங்கள் கரைகிறது.. நேரங்கள் நகர்கிறது.. அவள் விழி பார்த்தபடி இரு விழிகளுக்குள்ளே ஓர் ஊடல்.. என் மனதை ஏதோ செய்கிறாள்.. என் விழிகளின் அழகியவள்.. குழந்தை பேச்சில் என்னை கவர்கிறாள் ... கபடமில்லா கன்னியவள்.. இமை அசைவில் ஓர் அழகு இதழ் அசைவில் ஓர் நளினம் நடிக்க தெரிந்தவள் தான் அவள் சிலிர்க்காத மேனியும் அவளை பார்த்தால் சிலிர்த்திடும் அசைந்தாடும் விழிகளும் அவள் அழகை கண்டு வியந்திடும் யார் அவள் .. பெயர் தெரியா அழகியோ?

‪கலைந்தோடும்‬ ‪கனவுகள்‬

மயான அமைதியில் அவன் கால்கள் எதையோ தேடி , நடந்து கொண்டிருந்தது.வாழ்க்கையில் முழுதும் தோற்கடிக்கப்பட்டவன் தான் .கையில் எதையோ தூக்கி கொண்டு வானுயர்ந்த கட்டிடங்களை அயர்ந்து பார்த்த படி நகர்ந்து கொண்டிருந்தான். நிழலான வாழக்கைக்கு இவன் ஒரு எடுத்துக்காட்டு. நிஜத்தை தொலைத்தவனை நிழல் என்று கூறுவது தான் உரித்தாக இருக்கும். தொலைத்தவன் என்ற சொல்லை கூட தொலைக்கடிக்கப்பட்டவன் என்று திருத்தி கொள்ளலாம். ஆம் , அவன் பெயர் வெற்றி , தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள விவசாய கிராமத்தின் முதல் நிலை வாரிசு. அவன் அப்பா படித்தவர் தான் ஆனால் பாவம் இந்நாட்டின் கல்வி முறையில் படித்தவர். அதனால் தான் என்னவோ விவசாய நிலத்தை விற்று அவர் ஆசையை அவன் மீது திணித்தவர். அவன் அம்மாவோ தமிழ் பண்பாட்டை கெடுக்காத ஆன்மீக அறிவு கொண்ட அடுப்பூதும் பெண். வெற்றியை பற்றி ஒரு வரியில் சொல்லப்போனால் தனியார் மயமாக்கப்பட்ட உலகில் தனக்கென்ற தனிமையில் கனவுகளை துழைத்து நிஜத்தை தேடும் நிழல். சிறு வயது முதலே அவன் வாழ்க்கையை பற்றி நினைத்து நினைத்து தினம் தினம் ஓடி கொண்டிருப்பவர் , அவன் அப்பா. நல்லவர் தான் அவர் மனதிற்கு பூட்டிட்டு மூளையின