Skip to main content

Posts

Showing posts from July, 2017

ரகசியமே

ரகசியமே காத்திருந்த காலங்கள் கரைந்தோடட்டும்!! ஒரு வார்த்தை பேசி விடு!! நீண்டதொரு பயணத்தில் ரகசியமாய் நீயும் நானும் சென்று துலைவோம்!! துலைந்து திரிந்து தேடலின் சுவையை ரகசியமாய் உணர்வோம்!! உணர்ந்து உருகி காதலின் வலியை முதல் முறை அறிவோம்!! அறிந்து வியந்து சாதலின் வலியை அறுபதில் பெறுவோம்!! ரகசியமே காத்திருந்த காலங்கள் காறி உமிழுதடி அதற்காகவேனும் ஒரு வார்த்தை பேசி விடு !! # கிராதகனின்கனவு0 2

கற்பனை தகப்பன்

அவன் வித்திட்ட விந்தில் விதையாய் முளைத்தேன்! முதல் முத்த சத்தம் அவன் இதழ் வழி அறிந்தேன்! குருதி உடலுடன் என்னை தொட்டு பார்த்த முதல் விரல்! என்னை கரங்களால் கவர்ந்த முதல் அரண்! பிறண்டு கண்டதும் அவன் முகம் தான் தவழ்ந்து உருண்டதும் அவன் மடி தான் எட்டிட்டு கால் புரள தடமாக அவன் குனிந்தான் முதல் மொழி நான் பேச விழிவியப்பில் மனம் நனைந்தே போனான் காலங்கள் கரைந்தோட பள்ளியில்லா புத்தகத்துள் துலைந்தோட சொன்னான் திமிரெனும் தன்மானத்தை திளைக்காமல் காட்ட சொன்னான் நண்பனை நம்ப சொன்னான் துரோகியை விலக்க சொன்னான்! பிடித்தது அனைத்தையும் கண் இமைக்காமல் முடிக்க சொன்னான்! சாதிகள் இல்லையென்றான்! காதலும் வேண்டுமென்றான்! முடிந்த வரை உழைக்க சொன்னான் பிறர் பேச வாழச் சொன்னான்! உதவியில் புரள சொன்னான் விதி முடியும் வரை வாழச் சொன்னான்! தகப்பனாய் அவன் அளித்தான் என்  உயிரில் அதை செலுத்த சொல்லி!

கார்ப்பரேட் காதல்

KFC க்கு அருகே உள்ள அதே பேருந்து நிறுத்தம் தான் எந்த மாற்றமும் இல்லை அவளுக்கான காத்திருப்பில் அயர்ந்தவனாய் உயிரில்லா கைப்பேசியை உயிர் போக தடவிக்கொண்டிருந்தான். கார்ப்பரேட் வாசல் இத்தலைமுறை காதலின் முதல் தொடக்கம். அதே போல் தான் அவனும் தன் தொடக்கத்தை எதிர்பார்த்து காத்திருப்பில் ஆழ்ந்திருந்தான். நாகரீக காதலர்கள் அதிகம் உறவாடும் இடமும் , இதே கார்ப்பரேட் வாசல் தான். காலை,மாலை,இரவு என்று நேரங்கள் கடந்த காதல் கதைகள் இங்கு ஏராளம். காதல் தாண்டி , காமம் தாண்டி பிரிவை எதிர்நோக்கும் இடமும் , இதே கார்ப்பரேட் வாசல் தான். அவனின் அழகி அவனுக்கு அருகில் அதே பேருந்து நிறுத்தத்தில் தொடக்கத்தை துவங்கி வைக்க வந்துவிட்டாள். புருவங்கள் குறைத்து , முக அழகும் சிதைத்து , உதட்டோர சாயத்தில் , இறுக்கிய உடையில் பெண்ணியம் பேசிடும் மிடுக்கான பெண்ணாக அவன் அருகே அவள். ஒரு வாரம் முன்பு தான் அவளை முதல் முறை இதே பேருந்து நிறுத்தத்தின் அருகே பார்த்தான். இன்று இரண்டாவது முறை காதலிக்க துவங்கிவிட்டான்.அவளிடம் சொல்லியும் விட்டான். அவளும் அடுத்த காதலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் இவனின்

ஒரு நாள் காதலி

முதல் தடவ , நான் யாருன்னு எனக்கு காட்டுனா , அந்த ஒரு செகன்ட் , அந்த ஒரு வார்த்தை இதுவரைக்கும் அப்படி ஒரு feel ah நான் என் life la பாத்தது இல்ல. அந்த நிமிஷம் அவ ரொம்ப அழகா தெரிஞ்சா , அவ மட்டும்தான் அவ்வளவு அழகா தெரிஞ்சா , வோடாபோன் நாய் மாறி அவ பின்னாடியே போனேன்.  தேடி கண்டுபிடிச்சு at-least அவ சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு நன்றி ஆவது சொல்லனும்ல. ரொம்ப நேரம் கழிச்சு , என்ன லேசா பாத்தா சின்னதா சிரிச்சா , கண்லையே ஏதோ பேசுனா ஆனா எனக்கு ஒன்னும் புரியல. அதுக்கப்புறம் அவள பாக்கல , இப்பவரைக்கும் , ஆனா கண்டிப்பா ஒரு நாள் பாப்பேன் , அவ்வளுக்கான நன்றி இன்னும் எங்கிட்ட தான் இருக்கு , அத சொல்றதுக்காவது அவள பாப்பேன். #நன்றி01 #ஒருநாள்காதலி